69 வயதில் தொடங்கிய ஆன்மிகப் பயணம்… உலகம் முழுவதும் ஒலித்த கிருஷ்ண பக்தியின் கதை!
69 வயதில் தொடங்கிய ஆன்மிகப் பயணம்... உலகம் முழுவதும் ஒலித்த கிருஷ்ண பக்தியின் கதை!
‘சரணாகதி’ – ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கையை அனிமேஷன் திரைப்படமாக்கும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ்; ஆகஸ்ட் 2027-ல் உலகளாவிய வெளியீடு!
சென்னை: வயது என்பது சாதனைகளுக்குத் தடையல்ல; உறுதியான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் இருந்தால் ஒரு தனிமனிதனின் பயணம் உலகையே மாற்றும் என்பதற்கு வாழும் சாட்சியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீல ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர். அவரது வாழ்க்கை வரலாற்றையும், உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தியைப் பரப்ப அவர் மேற்கொண்ட மகத்தான ஆன்மிகப் பணிகளையும் மையமாகக் கொண்டு ‘சரணாகதி – தி லைஃப் ஆஃப் எ சரண்டர்ட் சோல்’ (ŚARAṆĀGATI – The Life of a Surrendered Soul) என்ற புதிய அனிமேஷன் திரைப்படம் உருவாகிறது.
‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’, ‘காந்தாரா’, ‘மஹாவதார் நரசிம்மா’ என வித்தியாசமான கதைகளையும் பிரம்மாண்டமான படைப்புகளையும் ரசிக...
