Monday, December 2
Shadow

Tag: #airaa #nayanthara #kottapadirajesh #priyankaravinthran #kssundaramoorthy #karthikjogesh #sarjan

வசனம் இல்லாத ஐரா படத்தின் சீனிக்ஸ் பீக்ஸ் காட்சிகள்

வசனம் இல்லாத ஐரா படத்தின் சீனிக்ஸ் பீக்ஸ் காட்சிகள்

Latest News, Top Highlights
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் யமுனா, பவானி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   மார்ச் 28-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 2 நிமிடம் 48 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்தப் படத்தில் நயன்தாரா இரண்டு தோற்றங்களில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரி...
ஐரா படத்தின் இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி இயக்குனர் சர்ஜூனுக்கு நன்றி

ஐரா படத்தின் இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி இயக்குனர் சர்ஜூனுக்கு நன்றி

Latest News, Top Highlights
தமிழ் இசைத்துறையில் திறமை வாய்ந்த இளம் இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி அவரது அடுத்த வெளியீடான 'ஐரா' படம் குறித்து மிகவும் பாஸிட்டிவ்வாக உணர்கிறார். வெவ்வேறு வகையான பாடல்களை கொண்டிருந்த அவரது ஐரா ஆல்பம் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த மிகப்பெரிய வரவேற்பை கொண்டாடாமல், அவரது நெருங்கிய நண்பரும், இயக்குனருமான கேஎம் சர்ஜூனுக்கு நன்றியை தெரிவிக்கிறார். "என் மீது இந்த அளவு நம்பிக்கையை அவர் வைக்காமல் இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை. லக்ஷ்மி மற்றும் மா போன்ற குறும்படங்களை எடுத்த நாட்களில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனக்கும் சர்ஜூனுக்கும் இடையே உள்ள பந்தம் விலை மதிப்பற்ற ஒரு பரிசு. அது தான் எங்களை கலையில் புதிய விஷயங்களை செய்ய உதவுகிறது. எப்போது, நாங்கள் கதையை பற்றி விவாதித்தாலும் நான் உடனடியாக சில இசைக் குறிப்புகளை வாசித்து காட்டுவேன். சம்பந்...
இணையதளத்தை கலக்கும் நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் ‘மேகதூதம்’ பாடல்

இணையதளத்தை கலக்கும் நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் ‘மேகதூதம்’ பாடல்

Latest News, Top Highlights
ஒவ்வொரு படத்திலும், நயன்தாராவின் நடிப்பிற்கு கிரேஸ் மற்றும் வரவேற்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் நடிப்பில் அடுத்து வரும் படமான 'ஐரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மூலம் எதிர்பாராத எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது. குறிப்பாக அவரது முதல் இரட்டை வேட படம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம். இயற்கையாகவே, நேற்று மாலை வெளியான 'மேகதூதம்' சிங்கிள் பாடல் அதன் இசை மற்றும் உணர்ச்சி கூறுகளுக்காக அனைவருக்கும் பிடித்துப் போயிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஐரா குழுவும் அதீத உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த பாடல் ஏன் 'பவானியின் கீதம்' என்று கூறப்படுகிறது என்பதை இயக்குனர் கே எம் சர்ஜூன் விளக்கும்போது, "இந்த பாடலை ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். 'பவானி' என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தன...
நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”.

நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”.

Latest News, Top Highlights
தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி , ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான "ஐரா" படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். "அறம்" படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை லட்சுமி, மா, ஆகிய குறும்படங்களை இயக்கிய, "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்" திரை படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, "அவள்" படத்தின் கலை இயக்குனர் சிவசங்கர் அரங்கு அமைக்க,டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே...