அஜித் அடுத்த படத்தை தயாரிக்கபோவது யார் தெரியுமா
நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.
‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங், கடந்த 7-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. இந்தப் படத்துக்காக அங்கு மிகப்பெரிய செட் போடப்பட்டுள்ளது. முதன்முதலில் பாடல்களைப் படமாக்கி வருகின்றனர். கடந்த சில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த அஜித், இந்தப் படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார்.
‘விசுவாசம்’ படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரித்து வருகிறார். அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘விவேகம்’ படத்தையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான் தயாரித்தது. அந்தப் படம் நஷ்டமானதால், தன்னுடைய அடுத்த படத்தைத் தயாரிக்கும...
