மும்முனை போட்டியில் இந்த முறை தீபாவளி யார் முந்த போகிறார்கள்
தமிழ் மக்களை பொருத்தவரை பண்டிகை என்றால் தனக்கு பிடித்த ஹீரோகள் படங்களோடு கொண்டாடுவது தான் புது ஆடை பட்டாசு பலகாரம் போல புது படம் கண்டிப்பாக தீபாவளிக்கு இருக்கவேண்டும். இது தமிழ் மக்களின் ஒரு வகை கொண்டாட்டம் என்று தான் சொல்லணும் தீபாவளி பொங்கலுக்கு படங்கள் ரிலீஸ் இல்லை என்றால் மக்கள் சோர்ந்து விடுவார்கள் அந்த பண்டிகை கலை கட்டாது .ஆனால் இந்த தீபாவளிக்கு கொஞ்சம் கடுமையான போட்டி
ஆமாம் ஒரு பக்கம் விஜய் ஒரு பக்கம் அஜித் ஒரு பக்கம் சூர்யா என்று மூன்று ஹீரோகள் படங்கள் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொல்லுகிறார்கள். இது ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் அந்த அளவுக்கு திரையரங்கு இல்லை இன்று தமிழ் நாட்டில் அப்படி வெளியானால் மூன்று முக்கிய ஹீரோகள் படங்கள் வெளியானால் வசூல் பாதிக்கும் இது தயாரிபாலர்களுக்கு மிகுந்த பதிப்பை உண்டு பண்ணும ஆகவே இது நடைமுறையில் சாத்தியம் ஆகுமா என்று பொருத்து இருந்து தான் பாக்கணும்...
