‘சம்பராலா ஏடி கட்டு’ படப்பிடிப்பு நிறைவு: 2027 சங்கராந்திக்கு திரைக்கு வரும் சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட ஆக்ஷன் படம்
‘சம்பராலா ஏடி கட்டு’ படப்பிடிப்பு நிறைவு: 2027 சங்கராந்திக்கு திரைக்கு வரும் சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட ஆக்ஷன் படம்
‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு (SYG)’ படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ரோஹித் கே.பி. இயக்கத்தில், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிக்கும் இப்படம், வரும் 2027 ஜனவரி 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகை வெளியீடாக திரைக்கு வருகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பிரம்மாண்டமான காட்சிகள், வலுவான உணர்வுகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான அனு...
