தீபாவளிக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
தீபாவளிக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!
நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தந்தை – மகள் இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.
தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி, இப்படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான நிபந்தனையற்ற அன்பையும், அவர்களுக்குள் நிலவும் ஆழமான பாசத்தையும் மையமாகக் கொண்ட இப்படம், அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் இரண்டாவது தோற்றப் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி ...
