அர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
'கழுகு - 2' படத்திற்கு பிறகு மிக பிரமாண்டமாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். இந்த படத்தில் 'Action King' அர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப், 'கோட்டா' சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை 'பேராண்மை' , 'பூலோகம்', 'மீகாமன்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.'க்ரைம் நாவல்' மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.
பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்பட உள்ளது....
