இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிக்கெட் வேட்டை தொடங்கியது – முன்பதிவு ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!
இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிக்கெட் வேட்டை தொடங்கியது – முன்பதிவு ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!
#OpenDoomsdayBookings கோரிக்கைக்கு மார்வெல் அளித்த பதில் – முக்கிய நகரங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக விற்பனை!
உலகம் முழுவதும் மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இந்திய வெளியீட்டுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது. முன்பதிவு தொடங்கிய உடனேயே ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியதால், பல்வேறு நகரங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான முன்பதிவில் பெரும் போட்டி நிலவி வருகிறது.
குறிப்பாக, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வர...
