அயோக்யா – திரைவிமர்சனம் (யோகியமானவன்) Rank 3.5/5
விஷாலின் அயோக்யா பல போராட்டங்கள் நடுவே வெளியாகியுள்ளது சரி இந்த போராட்டங்களுக்கு பதில் என்ன பார்ப்போம்
இயக்குனர் அறிமுகம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் உதவியாளர் வெங்கட் மோகன் இது இவருக்கு முதல் படம் இந்த படத்துக்கு திரை கதை வசனம் அமைத்து இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களம் மீண்டும் பெண்களின் மானம் காக்கும் கதை ஆனால் முற்றிலும் வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதை குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் மட்டும் இல்லை விஷாலும் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் .
இப்படி ஒரு கதையில் அதுவும் இந்த கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க நிச்சயம் தைரியம் வேண்டும் ரசிகர்களை பற்றி எல்லாம் கவலை படாமல் கதைக்கு இதுதான் சரி என்று நடித்து இருப்பது அருமை அதற்கு விஷாலுக்கு ஓர் பாராட்டு
சரி படத்தில் நடித்தவர்கள் கதையை பற்றி பார்ப்போம் விஷால்,ராசிகண்ணா. பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார்,யோகிபாபு,ஆனந்தராஜ்,ராதாரவ...




