ரசிகர்களே தயவு செய்து பாகுபலி 2 படத்தை திரையரங்கில் பாருங்கள்
தமிழகத் திரையரங்குகளில் இன்று பாகுபலி - 2 வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், இணைய தளத்தில் படம் ரீலிஸ் ஆகிவிட்டது. விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான படம் பாகுபலி. படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியுடன் முடிந்த பாகுபலி படத்திற்கு பதில் கூறும் வகையில் இரண்டாவது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகுபலி கன்குளுஷன் என்ற இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்றன. படத்தைக் காண மக்கள் பெரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர். தமிழகத...
