
தமிழகத் திரையரங்குகளில் இன்று பாகுபலி – 2 வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், இணைய தளத்தில் படம் ரீலிஸ் ஆகிவிட்டது. விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான படம் பாகுபலி. படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியுடன் முடிந்த பாகுபலி படத்திற்கு பதில் கூறும் வகையில் இரண்டாவது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகுபலி கன்குளுஷன் என்ற இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்றன. படத்தைக் காண மக்கள் பெரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர். தமிழகத்தில் இன்று இந்தத் திரைப்படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.
காலை காட்சி ரத்து ஆனாலும் காலை 11 மணியில் இருந்து படம் வெளியாகும் என்று படகுழுவினர்கள் அறிவித்துள்ளனர். பிரச்சனைகள் பேசி தீர்த்து முடிந்துவிட்டது. ஒரு வழியாக படம் வெளியாகும் என்ற ஒரு பக்க சந்தோசம் மறு பக்கம் சினிமாவை அழிக்க வந்த பாவிகளின் சதி ஒரு பக்கம் ஆயிரம் குடும்பங்களின் உழைப்பு ஒரு பக்கம் கிட்டதட்ட 3௦௦ கோடி முதலிடு பாவம் தயாரிப்பாளர். அவரின் குடும்பம் என்ன ஆகும் எவ்வளவு கடன் பட்டு இருப்பார்கள் ரசிகர்களே நீங்கள் தான் இந்த கொடுமைக்கு முடிவு கட்டி அனைவரும் திரையரங்கில் படம் பார்க்க வேண்டும் என்று உங்களை இரு கரம் மட்டும் இல்லாமல் உங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறோம்.
