Wednesday, April 22
Shadow

Tag: #balakumaran #pattukottaiprabhakar #“ZERODEGREEPUBLISHING”

தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு

தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு

Latest News, Top Highlights
சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டிருக்கிறது. இதன் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளர்கள், சாருநிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தரராஜன், மதன், பாஸ்கி, கவிதா சொர்ணவேல், ஸ்ரீராம் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களும், வாசகர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கமாக, கஞ்சிரா கலைஞர் ஹரீஷ்குமார் அவர்களின் தலைமையிலான இசைக்குழுவினரின் கர்நாடிக் ஃப்யூஷன் கச்சேரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் உரிமையாளர்களான திருமதி காயத்ரி ராமசுப்ரமணியம் மற்றும் ராம்ஜி நரசிம்மன் ஆகியோர் வந்திருந்த விருந்தினர்களை வரவ...
தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

Latest News, Top Highlights
Paulo Coelho, Haruki Murakami, Orhan Pamuk என பிறமொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை நாம் நம்மில் ஒருவராக அறிந்திருப்பதற்குக் காரணம் அப்புத்தகங்களின் தரமான ஆங்கில மொழிபெயர்ப்பே. நம்மிடம் நோபல் பரிசு வாங்குவதற்குகந்த தரம்மிக்க எழுத்தாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் யாராலும் கண்டுபிடிக்கப்படாத குகைச் சித்திரங்களைப் போல் அறியப்படாமல் இருப்பது மனவேதனையை தரும் விஷயம். இக்குறையை போக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing). சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை ப்ரபாகர், மதன் ஆகியோருடைய புத்தகங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு முதற்கட்டமாக வெளிவர இருக்கின்றன. இந்திரா சவுந்திரராஜன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் நாவல்கள் மொழிபெயர்ப்பில் உள்ளன. சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், ல.ச.ரா, கு.அழகிரிசாமி, புதுமை பித்த...