
சாரி சொல்லுறவங்க எல்லாம் நல்லவங்க இல்லை வனிதாவை சாடும் லாஸ்லியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூன்று இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதிலும் சண்டை மோதல் தான் ஆம் இந்த முறை வனிதாவுக்கு சவால் விடும் லாஸ்லியா என்று தான் சொல்லணும் .
இன்று ஒளிபரப்பாக உள்ள எபிசோடில் விவாதமேடை போன்று அவர்கள் அனைவரும் நமது கிடைக்கின்றனர் மோகன் வைத்தியா, சாக்ஸி,அபிராமி நடுவர்கள் போல அமர்ந்திருக்கின்றனர். லாஸ்லியா கவின் சாண்டி ஒரு அணியாகவும் சேரன் வனிதா தர்ஷன் செரின் அணியாகவும் அமர்ந்திருக்கின்றனர்.
சாரி சொல்றது நாள யாரும் நல்லவங்களா மாறிட மாட்டாங்க என்று லாஸ்லியா கேள்வி எழுப்புகிறார் அதற்கு வனிதா அந்த பொண்ணோட நடவடிக்கை என்னை மிகவும் பாதித்ததாக கூறுகிறார். ஆனால் கவின் எப்போதும் போல லாஸ்லியாவிடம் விடு அவங்களுக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயம் தானே எப்பவும் என்று கவின் லாஸ்லியாவை சமாதனபடுத்துகிறார்....