
சுல்தான் வழியில் கிச்சா சுதீப்பின் பயில்வானை பிரபலடுத்தும் சல்மான் கான்
எல்லைகளை கடந்து அன்பை வெளிப்படுத்துவதிலும், நட்பை பேணுவதிலும் கிச்சா சுதீப் சளைத்தவர் அல்லர். நாட்டின் அடையாளமிக்க பிரபலங்கள் அனைவரிடமும் அவர் அன்பை போற்றி பாதுகாத்து வருகிறார். அந்த அன்பு அவரின் “பயில்வான்” படத்தில் வழியே பெருகி வருகிறது.
“பயில்வான்” திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் ரிலிஸாவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள்.
பாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான் கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தை தன் தனித்தன்மை கொண்ட பிரத்யேக வழியில் விளம்பரப்படுத்தியுள்ளார்.
அவர் பயில்வான் படத்தின் பாக்ஸர் கதாப்பாத்திர லுக்கை தன் முந்தைய படமான சுல்தானில் கொடுத்த போஸைத் தந்து “பயில்வானை” பிரபலத்தியுள்ளார்.
சல்மான் கானு...