
இதுக்காக தவிக்கும் பிந்து மாதவி
காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் தங்களது அழகிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். ராதிகா ஆப்தே, இலியானா, ராய் லட்சுமி உள்ளிட்ட சில நடிகைகள் பிகினி போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு அட்டாக் பண்ணி வருகிறார்கள்.
இந்நிலையில், பிந்து மாதவியோ சில வாரங்களுக்கு முன்பு சினிமா வேலைகள் இல்லாததால் ஆடு மேய்க்க செல்கிறேன் என்று சொல்லி தான் ஆடு மேய்ப்பது போன்ற ஒரு போட்டோவை இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது தலைவிரி கோலத்தில் தான் இருக்கும் ஒரு அதிர்ச்சி தரும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அதோடு, நேற்று இரவு முழுக்க தூக்கமில்லை அதனால் தான் இந்த கோலத்தில் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதையடுத்து, அவரிடத்தில் சில ரசிகர்கள் அவரது பிரச்சினையை கேட்டபோதும், சிலர் அவரை கிண்டல் செய்து கமெண்ட் கொடுத்து வருகிற...