
தான் தயாரிக்கும் படங்களில் பணிபுரியும் தொழில்நுட்பகலைஞர்களை இப்படி தான் நடத்துவாராம் தயாரிப்பளர் போனி கப்பூர்
தன் முதல் படமான ஹம் பாஞ்ச் முதல் சமீபத்திய மாம் படம் வரை, தன் நடிகர்களுக்கு மிகச்சிறந்த விரும்தோம்பல் அளிப்பதை விரும்பும் போனி கபூர்
மிகவும் எளிமையாக, தாழ்மையாக, கீழ்ப்படிதலுமாக இருக்கும் தயாரிப்பாளர் போனி கபூர் நட்புக்கு மட்டுமல்ல, தனது நண்பர்கள், குழுவினர் மற்றும் சக ஊழியர்களுக்கு அளிக்கும் விருந்தோம்பலுக்காகவும் புகழ் பெற்றவர். இந்த பழம்பெரும் தயாரிப்பாளர் 1979/80ல் தயாரித்த அவரது முதல் திரைப்படமான "ஹம் பாஞ்ச்" முதலே தனது குழுவினரை நன்றாக நடத்துவதை உறுதிப்படுத்துகிறார்.
போனி கபூர் தனது முதல் படமான ஹம் பாஞ்ச் படத்தின் படப்பிடிப்பின் போது, தனது நடிகர்களுக்கு உணவு பரிமாறியிருக்கிறார். அதற்கும் மேலாக, படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகில் ஹோட்டல் இல்லாத காரணத்தால், அங்கிருந்து அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு 100 மைல்கள் தூரம் செல்ல வேண்டும் என்பதாலும் கழிவறைகளுடன் கூடிய காட்டேஜ்களை ...