போதை ஏறி புத்தி மாறி – திரைவிமர்சனம் Rank 2/5
போதை ஏறி அதனால் ஒருவனின் புத்தி மாறி என்னவெல்லாம் நடக்கும் என்பதே படத்தின் கரு.
நாயகன் தீரஜ் திருமணத்தை மறுநாள் வைத்துக்கொண்டு முதல் நாள் நண்பர்களின் அறைக்கு செல்கிறான். அங்கு தவறுதலாக அவன் டிரக் எடுத்துக் கொள்கிறான். இன்னொரு புறம் கடத்தல் கும்பலும் போலிஸிம் டிரக் பற்றி எழுதும் பத்திரிக்கை நிருபரை மிரட்டி வழிக்கு கொண்டுவர பார்க்கிறார்கள். இந்த இரண்டு கதையும் கடைசி புள்ளியில் இணைகிறது. போதை ஏறினால் வாழ்க்கை எந்த அளவு சுக்கு நூறாகும் என்பதை சொல்ல வந்திருக்கும் படம் தான் "போதை ஏறி புத்தி மாறி".
மிக எளிமையான ஒரு கருத்தை சுவாரஸ்யபடுத்த, மிகச்சிக்கலான திரைக்கதை அமைத்து, ரசிகனை கவர முயன்றிருக்கிறார்கள். பத்து நிமிடத்திற்கு ஒரு அதிர்ச்சி என்பதை எழுதி வைத்து, அதை முயற்சித்திருக்கிறார்கள் ஆனால் கதையுடன் நாம் கனக்ட் செய்து கொள்ள முடியாததால் மொத்த சம்பவங்களும் அந்நியமாக இருக்கிறது. நல்ல ஐடியா ஒன...