
சர்வதேச திரைப்பட விருதுகளை வென்ற “பௌவ் பௌவ்”. படத்தில் பாடியது பெருமை – மதுபாலகிருஷ்ணன்.
லண்டன் டாக்கீஸ் கே.நடராஜன் தயாரிப்பில், மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் திரைப்படம் "பௌவ் பௌவ்". லாஸ் ஏஞ்சல்ஸின் லைஃப் சர்வதேச திரைப்பட விழா உட்பட, பலவேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்ற இந்த படம் உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. மார்க் டி மியூஸ் & டெனிஸ் வல்லபன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் அபிராமி ராமநாதன், எடிட்டர் மோகன் இசையை வெளியிட இயக்குனர் சசி பெற்றுக் கொண்டார்.
இந்த படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி என ஐந்து மொழிகளில் இந்த படத்துக்காக என்னை பாட வைத்திருக்கிறார்கள். பெங்காலியில் நான் பாடிய முதல் பாடல் இந்த படத்துக்காக தான் என்றார் பாடகர் மதுபாலகிருஷ்ணன...