இன்றைய தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் காதல் மற்றும் உறவுகளை ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் பேசும்”- விநியோகஸ்தர் எஸ். குகன்
“இன்றைய தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் காதல் மற்றும் உறவுகளை ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் பேசும்”- விநியோகஸ்தர் எஸ். குகன்!
ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து அர்த்தமுள்ள கதைகளை திரைப்படங்களாக விநியோகம் செய்வதில் விநியோகஸ்தர்களின் பங்கு முக்கியமானது. அந்த வரிசையில், தமிழ்நாட்டின் விநியோக துறையில் குறிப்பிடத்தக்க நபராக விளங்கும் எஸ். குகன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மூலம் மாநிலம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார். அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகிலும் அவர் தடம் பதித்திருக்கிறார். 'காந்தாரா', 'கே.ஜி.எஃப் அத்தியாயம் 2', 'குருப்', 'நண்பகல் நேரத்து மயக்கம்', மற்றும் ‘இறுகப்பற்று' போன்ற வெற்றிப் படங்களை தந்ததன் மூலம் அவரது திரை ரசனையை எளிதில் புரிந்து கொள்ளலாம். தற்போது, ...
