
கௌதம் கார்த்திக் நடிக்கும் செல்லப்பிள்ளை
கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு “செல்லப்பிள்ளை” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்..இப்படத்தின் கதை,திரைகதை,வசனம் மற்றும் பாடல்கள் எழுதி அறிமுக இயக்குனர் அருண் சந்திரன் இயக்குகிறார்.. சுகுமார் ஒளிப்பதிவு செய்ய,படத்தொகுப்பு தினேஷ் பொன்ராஜ், கலை துரைராஜ் மற்றும் அறிமுக இசையமைப்பாளர் தீசன் இசையமைக்கிறார்.
இப்படத்தினை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக இசக்கி துரையும் ஒயிட்லைன் புரொடக்ஷன் சார்பாக அன்பழகனும் இனைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெறவுள்ளது.....