ரத்தம் தெறிக்கும் பின்னணியில் ‘செங்குலம்’… கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய பட டைட்டில், கிளிம்ப்ஸ் வெளியீடு!
ரத்தம் தெறிக்கும் பின்னணியில் ‘செங்குலம்’... கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய பட டைட்டில், கிளிம்ப்ஸ் வெளியீடு!
தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் கதைகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், ரத்தம், மண், வீரம் என அதிரடியான பின்னணியுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படமான ‘செங்குலம்’. இப்படத்தின் தலைப்புப் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தை தீபக் ரவி இணைந்து தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
வெளியாகியுள்ள தலைப்புப் போஸ்டரே படத்தின் கதைக்களம் குறித்த பல ...
