ஓவியா – ராஜாபிரபு நடிப்பில் உருவாகும் ‘கிளிக்’ திரைப்படம்!
ஓவியா – ராஜாபிரபு நடிப்பில் உருவாகும் ‘கிளிக்’ திரைப்படம்!
இளமைத் துள்ளலும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டெய்னர்!
ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts) நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜாபிரபு தயாரித்து கதாநாயகனாக நடிக்க, சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிளிக்’ (Click).
இப்படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சுந்தர் மஹாஸ்ரீ, அஸ்மிதா, அமுதவாணன், லொள்ளு சபா மனோகர், சல்மா பைரோஸ், அருள் செல்வம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்றைய இளைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற வகையில், இளமைத் துள்ளல், சஸ்பென்ஸ், நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக, ஜென் சி (Gen Z) தலைமுறையினருடன் எளிதில் ஒன்றிணையும் வகையில் புதுமையான கதைக்களத்தையும் விறுவிறுப...
