
ஃபாக்ஸ் ஆபிஸை கலக்கி வரும் ஜெயம் ரவியின் “கோமாளி”!
ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் ஃபாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு படக்குழுவினரே எதிர் பாராதது.
இப்படத்தின் விநியோகஸ்தர்கள் இதுவரை வெளிவந்த ஜெயம் ரவி படங்களிலேயே இந்த கோமாளி திரைப்படம்தான் அதிக வசூலை பார்த்துள்ளதாக மிகுந்த சந்தோஷத்துடன் கூறியுள்ளனர். இது இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. தயாரிப்பாளருக்கு இந்த வருடத்தில் இது இரண்டாவது மிகப்பெரிய வெற்றி. நடிகர் RJ பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான “LKG” திரைப்படம் இவர்களது முதல் வெற்றித் திரைப்படம்.
தற்போது கோமாளி படக் குழுவினர் இப்படத்தின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் நடிப்பில் கலக்கியுள்ள ஜெயம் ரவிதான் இந்த நிறுவனத்தின் ஆஸ்தான நடிகர் என்று தயாரிப்பாளர் பெருமையுடன் பல மேடைகளில் பேசி வருகிறார்.அற...