டிஜிட்டல் மோசடிகளுக்கு எதிராக பெண் சக்தியின் போராட்டம்… புதிய பாதையில் களமிறங்கும் ‘அச்சுத அவதாரம்’!
டிஜிட்டல் மோசடிகளுக்கு எதிராக பெண் சக்தியின் போராட்டம்... புதிய பாதையில் களமிறங்கும் ‘அச்சுத அவதாரம்’!
திரையுலகில் புதுமையான கதைகளுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிய தயாரிப்பு நிறுவனமான ரெய்ரா வெஞ்சர்ஸ் தனது முதல் திரைப்படமான ‘அச்சுத அவதாரம்’ மூலம் வித்தியாசமான படைப்பை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளது. வணிக அம்சங்களுடன் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வையும் இணைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், தற்போது திரையுலகில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
திரைப்பட ஆர்வலரான புனித் நிறுவியுள்ள ரெய்ரா வெஞ்சர்ஸ், புதிய சிந்தனைகள், பரிசோதனை முயற்சிகள் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாகும் கதைகளை திரைப்படங்களாக உருவாக்கும் நோக்கத்துடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. முதல் முயற்சியிலேயே வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்திருப்பது, படத்தின் மீது எதிர்பார்ப்பை அதி...
