கோடைகால பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்குத் தயாராகும் ‘டிமாண்டி காலனி 3’ — விநியோகத்தில் ஃபைவ் ஸ்டார் செந்திலின் வலுவான களம்!
கோடைகால பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்குத் தயாராகும் ‘டிமாண்டி காலனி 3’ — விநியோகத்தில் ஃபைவ் ஸ்டார் செந்திலின் வலுவான களம்!
தமிழ் திரையுலகில் ஹாரர்-த்ரில்லர் ஜானரில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள ‘டிமாண்டி காலனி’ தொடரின் மூன்றாவது பாகமான ‘டிமாண்டி காலனி 3 - தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம், இந்த கோடைகாலத்தில் திரையரங்குகளை அடையவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்திற்கு, தற்போது விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத் திரையரங்கு விநியோக உரிமையை, தொடர்ந்து பல வெற்றி படங்களை வழங்கிய அனுபவமிக்க விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் கைப்பற்றியுள்ளார். வணிக ரீதியாக வெற்றி கண்ட பல படங்களை திறம்பட வெளியிட்ட அனுபவம் கொண்ட அவர், இந்தப் படத்தையும் மாநிலம் முழுவதும் விரிவாக வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனால்...
