
’12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால். செய்தியாளர்களிடம் ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு!
தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால் என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார். அதற்கு சாட்சியாக சமர் படத்தை எடுத்து நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு பத்திரிகையாளர்களிடம் செல்போனில் பேசினார்.
வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களம் இப்போது சூடு பிடித்துள்ளது. பரபரப்பான இத்தேர்தலில் முழு வீச்சில் களம் இறங்கியுள்ள 'தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி' சார்பில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் ஆய்வுக் கூடத்தின் திரையரங்கில் நடைபெற்றது.
முன்னதாக இன்னொரு அணியாகப் போட்டியிட்ட கலைப்புலி ஜி சேகரன் மற்றும் ஆதரவாளர்கள் திடீர் திருப்பமாகப் போட்டியிலிருந்து விலகி முன்னேற்ற அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.. இது இந்த அணிக்குத் திருப்புமுனையான பலத்தைச் சேர்த்துள்ளது. இந்த அணியின் இணைப்பு விழாவாக இ...