கவுதம் மேனன்இயக்கத்தில் தனுஷுக்கு அண்ணாக நடிக்கும் சசிகுமார்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா'. கடந்த 2016-ஆம் வருடம், நவம்பர் மாதம் வெளியான இந்த படம் வெளியாகி ஒன்றரை வருடத்துக்கும் மேலாகியும் அவர் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', துருவ நட்சத்திரம் படங்களின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.
எனை நோக்கி பாயும் படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்றும், மிக விரைவில் இப்படம் வெளியாகும் என்றும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, ராணா முதலானோர் நடிக்கும் இந்த படத்தில் தனுஷின் அண்ணனாக சசிகுமார் நடித்திருக்கிறார். மும்பையில் உள்ள போலீஸ் அதிகாரி வேடம் சசிகுமாருக்கு. பொள்ளாச்சியில் வசிப்பவராக தனுஷ் நடித்துள்ளார். அங்கே படப்பிடிப்புக்கு வரும் நடிகையாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இரண்டு ஆங்கிலப் படங்களின் கலவையாக இ...