வடசென்னை திரை விமர்சனம் (சிங்காரம்) Rank 4.75/5
ஒரு சில கூட்டணியை பார்த்தாலே கண்ணை மூடிக் கொண்டு அவர்களின் படத்திற்கு முதல் நாளே போகலாம். அப்படிபட்ட இயக்குனர்-நடிகர் கூட்டணி என்றால் அது வெற்றிமாறன்-தனுஷ் தான். இவர்களின் பல வருட உழைப்பில் தயாராகி இன்று வெளியாகி இருக்கிறது வட சென்னை. சென்னையை விரும்பும் ரசிகர்களுக்கு வடசென்னை பிடித்ததா பார்ப்போம்.
கதைக்களம்
செந்தில்(கிஷோர்) குணா(சமுத்திரக்கனி) இருவரும் ஆரம்பத்திலேயே ஒரு கொலையை செய்கின்றனர். அந்த கொலையில் இருந்தே பல அரசியல் பிறக்கின்றது.
அதன் பின் செந்தில், குணா இருவரும் பிரிந்து தங்களுக்கென்று ஒரு கேங்கை உருவாக்கி ஒருவரை ஒருவர் கொலை செய்ய துடிக்கின்றனர்.
அந்த நேரத்தில் தனுஷ் (அன்பு) கேரம் ப்ளேயராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்க இந்த கேங் வாருக்குள் யதார்த்தமாக உள்ளே வர அதை தொடர்ந்து யார் கொடி வடசென்னையில் பறக்கின்றது, ஆரம்பத்தில் செந்தில் குணா யாரை கொலை செய்தார்கள், தனுஷ் த...