ரூ. 50 கோடி கிளப்பில் இணைந்த கொடி! தனுஷ் மகிழ்ச்சி!
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார். மேலும் ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதோடு கொஞ்சம் எதிர்மறையான விமர்சனம் வந்தாலும் படம் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெள்ளியன்று வெளியானது. இதில் உலகம் முழுவதும் சேர்த்து முதல் 7 நாட்களில் இப்படம் ரூ. 50.4 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....