தனுஷ் நாயகி சோனம் கபூர் பிறந்த தினம்
சோனம் கபூர் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகளாவார், சினிமா தயாரிப்பாளராக இருந்த சுரீந்தர் கபூரின் பேத்தி. தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சஞ்சய் கபூர் மற்றும் சந்தீப் மார்வாவின் சகோதரன் மகள். சோனம் கபூர் தான் மூன்று குழந்தைகளில் மூத்தவர்; சகோதரி ரியா மற்றும் சகோதரர் ஹர்ஷவர்தன் ஆகியோர் மற்ற இருவர். கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் இவர் படித்தார், பின் தனது சர்வதேச இளங்கலை படிப்பை மேற்கொள்ள தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய உலக கல்லூரியில் பதிவு செய்தார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்தை பிரதானப் பாடங்களாக எடுத்துப் பயின்று பட்டம் பெற்றார்.
ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி இவருக்கு சரளமாய் வரும். மரபு இந்திய மற்றும் லத்தீன் நடனங்களில் இவர் பயிற்சி பெற்றிருக்கிறார். ஏராளமான குறும்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார், சுமார் பத்தாக இருக்கலாம்.
ஒர...