இராமாயன் தொடரில் நடித்த அனுமான் நடிகர் தாரா சிங் மறைந்த தினம்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தர்மூசக் என்ற இடத்தில் பிறந்தார் (1928). தாராசிங் ரன்தாவா என்பது இவரது முழு பெயர். தந்தை பெரும்பாலும் வெளியூர்களிலேயே இருந்ததால் மூத்த மகனான இவர் வயல்களில் வேலை செய்து வந்தார். சிறு வயதிலேயே பயில்வானாக வேண்டும் என்பது இவரது ஆசை
பாதாம் கொட்டைகளை வெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு, நிறைய பாலையும் குடித்துவிட்டுப் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்வார். இதனால் வயதுக்கு மீறிய வளர்ச்சியடைந்தார். 6.2 அடி உயரமும் அதற்கேற்ப ஆஜானுபாகான தோற்றமும் கொண்டிருந்தார்.
இவரும் இவரது தம்பியும் ஊர் ஊராகச் சென்று மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்றனர். 1947-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு பல போட்டிகளில் வென்றார். 1954-ல் இந்தியா திரும்பியபின் இந்திய மல்யுத்த சாம்பியனாக உயர்ந்தார்.
1959-ல் முன்னாள் உலக சாம்பியனை வென்று காமன்வெல்த் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற...