50 ஆண்டுகால நட்பின் புதிய அத்தியாயம்… கமல் தயாரிப்பில் ரஜினியின் ‘தர்மன்’ ஆரம்பம்!
50 ஆண்டுகால நட்பின் புதிய அத்தியாயம்... கமல் தயாரிப்பில் ரஜினியின் ‘தர்மன்’ ஆரம்பம்!
இந்திய சினிமா ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கமல்ஹாசன் – ரஜினிகாந்த் கூட்டணியின் புதிய வரலாறு; சென்னையில் கோலாகலமாக தொடங்கிய ‘தர்மன்’ படப்பிடிப்பு!
சென்னையில் இன்று இந்திய திரையுலகின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகக் கருதப்படும் நிகழ்வு நடைபெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் இதயங்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், முதன்முறையாக தயாரிப்பாளர் – கதாநாயகன் கூட்டணியில் இணையும் திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
இந்த அறிவிப்புடன் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் போட்டியைத் தாண்டி நட்புக...
