`துருவங்கள் பதினாறு’ இயக்குனருடன் இணையும் அரவிந்த்சாமி
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான `துருவங்கள் பதினாறு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 21 வயதே ஆன இளம் இயக்குநரின் முதல் படமான `துருவங்கள் பதினாறு’ முற்றிலும் மாறுபட்ட கதை என்பதால் திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் நடிகர் ரகுமானின் கதாபாத்திரமும் அனைவராலும் பேசப்பட்டது.
இந்த படத்தை முன்னணி இயக்குனர்கள் ஷங்கர் A.R.முருகதாஸ் பாக்யராஜ் போன்ற முன்னினி இயக்குனர்களை பெரிதும் கவர்ந்துள்ளது அவர்களா முன்வந்து தனது ட்விட்டர் பகுதியில் இந்த இளம் இயக்குனரை பாராட்டி குவித்தனர் அது மட்டும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் அவரை அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில், `துருவங்கள் பதினாறு’ படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் `நரகாசுரன்’ என்ற படத்தை இயக்க உள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க சஸ்பென...