
நடிப்புக்கு பை பை சொன்ன விக்ரம் மகன் துருவ் படிப்புக்கு ஹய்5!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விக்ரம் அவரின் நடிப்பால மக்களை அந்த வகையில் கட்டி போட்டுள்ளார் அதோடு பல விருதுகள் பல சாதனைகளுக்கு சொந்தகாரர். தனதுகடின உழைப்பால் சினிமாவில் முன்னுக்கு வந்தவர்.தற்போது இவர் மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் கால் பதித்துள்ளார்.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம், அமெரிக்காவில் படித்து வருகிறார். படிப்பை முடித்த பிறகு தான் சினிமாவில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்களது திட்டமாக இருந்தது. ஆனால் துருவ் விக்ரம், இணையதளத்தில் வெளியிட்டிருந்த டப்மாஷைப் பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது.
அதன்காரணமாக படித்து வரும்போதே பாலா இயக்கியுள்ள வர்மா படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் அமெரிக்காவிற்கு சென்றிருந்த அவர், சமீபத்தில் வர்மா படத்தின் டிரைலர் விழாவுக்காக சென்னை வந்திருந்தார். அதையடு...