ஜோதிகா நடிப்பில் அடுத்த படத்திற்கான தகவலை வெளியிட்டது டிரீம் வாரியார் பிக்ச்சர்ஸ்
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு ஸ்டுடியோவான டிரீம் வாரியார் பிக்ச்சர்ஸ், தனது அடுத்த படம் தயாரிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
அந்த தகவலில், தனது அடுத்த தயாரிப்பில், ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ் ராஜ் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் நடிப்பவர்கள் குறித்த முழு விபரம் விரைவில் வெளியாகும் என்றும், இந்த படத்திற்கான சூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோரால் தொடங்கப்பட்ட டிரீம் வாரியார் பிக்ச்சர்ஸ், தேசிய விருது வென்ற ஜோக்கர், காஸ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, அருவி மற்றும் சூரியாவின் என்ஜிகே பட...