
கௌதம் மேனனை மயக்கிய இசையமைப்பாளர்.
புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் இசையமைப்பாளர் இஷான் தேவ். சாரல், பட்டினப்பாக்கம், மிக மிக அவசரம் படங்களும் இஷான்தேவ் இசையில் வெளியாக உள்ள படங்கள். தவிர விஷால் ஆந்தம், இயக்குநர் சேரன் வரிகளில் நீட் தேர்வு முறையால் பலியான அனிதாவிற்கு சமர்ப்பணம் செய்த “பெண்ணிற்கோர் கொடுமை செய்தோம்“ பாடல்களும் இஷான் தேவ் இசையில் உருவானவை தான்.
என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் பாடல்களைக் கேட்ட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தன் ஒன்றாக இசை நிறுவனத்தின் சார்பாக அதை வெளியிட்டார். ஒன்றாக யூடியூப் சேனலில் "இரவில் வருகிற திருடன் போலவே" பாடல் செம ட்ரெண்ட் அடித்தது.
கயல் ஆனந்தியில் கால்களைச்சுற்றித்தான் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் கதை, காதல் எல்லாம். படத்தின் முதல் போஸ்டராக இஷானுக்கு டைரக்டர் ஜெகன்...