‘என்ன விலை’ – திரை விமர்சனம் (Rank 4/5)
‘என்ன விலை’ – நேர்மையின் விலையை கேள்விக்குள்ளாக்கும் நெகிழ்ச்சியான படைப்பு!
தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளியாகும் சில சிறிய பட்ஜெட் திரைப்படங்கள், மிகப்பெரிய நட்சத்திரப் படங்களைக் காட்டிலும் வலுவான கதையையும் அழுத்தமான கருத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கின்றன. அந்த வரிசையில், புதிய சிந்தனை, வித்தியாசமான கதைக்களம், அழுத்தமான திரைக்கதை, இயல்பான நடிப்பு என பல சிறப்பம்சங்களுடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் ‘என்ன விலை’.
ராமேஸ்வரத்தின் பின்னணியில், நாம் அதிகம் அறிந்திராத ஒரு உலகத்தை கதைக்களமாக எடுத்துக்கொண்டு, ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நிகழும் சம்பவம் எப்படிப்பட்ட மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதையும், அந்த பிரச்சினை அவனது குடும்பத்தையும் சமூக வாழ்க்கையையும் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதையும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சஜீவ் ...

