
ரசிகரின் செல்போனை உடைத்த நடிகை மீது போலீசில் புகார்
நடிகர், நடிகைகளுடன் ரசிகர்கள் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுக்கு சில நேரங்களில் அசவுகரியங்கள் ஏற்படுவது உண்டு. ஆனாலும் அதை பொறுத்துக்கொண்டு அவர்களுடன் நின்று படம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் தெலுங்கு நடிகை ஒருவர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பறித்து எறிந்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகையின் பெயர் அனசுயா பரத்வாஜ். ஐதராபாத்தில் வசிக்கிறார். இவர் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். டெலிவிஷனில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தார்னா பகுதியில் ஒரு ரசிகர் அனசுயாவுடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த அனசுயா ரசிகரின் செல்போனை பறித்து ரோட்டில் வீசி எறிந்து உடைத்தார். இதையடுத்து அனுசுயா மீது அந்த ரசிகரின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் நாயகி தான் அந்த போனை உடைக்கவில்லை என்று கூறிவருகிறார்....