ஹாலிவுட் ஃப்ரெட் மர்பி உதவியாளர் சந்திரமௌலி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ்
2011ம் ஆண்டுத் தெலுங்கில் வெற்றிப்பட இயக்குனர் B.சுகுமார் இயக்கத்தில் நாகச் சைத்தன்யா தமன்னா நடிப்பில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வசூல் வேட்டை செய்த திரைப்படம் "100% லவ்". தற்போது இப்படத்தைத் தெலுங்கில் இயக்கிய B.சுகுமார் தமிழில் கிரியேடிவ் சினிமாஸ் NY சார்பில் தயாரிக்கின்றார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை NJ எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றது.
இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
பேக் வாட்டர்ஸ், நடாஷா உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளரும், பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஃப்ரெட் மர்பியிடம் பணியாற்றியவருமான MM.சந்திரமௌலி இப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். சினிமா படிப்பில் பட்டம் பெற்றவரான இவர் கூறுகையில் பெரும் பொருட்செலவில் லண்டனில் தயாராகவுள்ள இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உ...