
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மிஸ் கேரளா காயத்ரி சுரேஷ் ஒப்பந்தம்
பொங்கலுக்கு வெளியாகும் 'ப்ரூஸ்லீ' படத்தின் தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறது படக்குழு. அதனைத் தொடர்ந்து 'அடங்காதே', '4 ஜி', ராஜீவ் மேனன் இயக்கும் படம், சசி இயக்கத்தில் உருவாகும் படம் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் ஜி.வி.பிரகாஷ். இதில் 'அடங்காதே' மற்றும் '4ஜி' ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
'4ஜி' படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் இயக்கி வருகிறார். சதீஷ் மற்றும் சுரேஷ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.
இப்படத்தின் நாயகியாக காயத்ரி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மிஸ் கேரளா பட்டம் வென்றவர். தமிழில் நாயகியாக நடிக்கும் முதல் படம் இது. ஹைதராபாத் மற்றும் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
ஜனவரி 2ம் வாரத்தில் சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு....