
விவசாயிகளுக்கு என் முழு சம்பளத்தை தருகிறேன் ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் இன்று நடிகராக சாதித்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கி மக்களுக்காக குரல் கொடுத்தார்.
பின் அவர் ஜல்லிக்கட்டுக்காக கொம்பு வச்ச சிங்கம்டா பாடலை பாடி இசையமைத்து வெளியிட்டார்.
இப்பாடலின் மூலம் கிடைத்த வருமானத்தை விவசாயிகளுக்காக வழங்குவேன் என சொன்ன அவர் தற்போது இன்னொரு புதிய முடிவையும் எடுத்துள்ளார்.
இதன்படி விரைவில் விவசாயிகளுக்காக ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கப்போவதாகவும் அடுத்து வெளிவரும் தன் படத்தின் முழுச்சம்பளத்தையும் அவர்களுக்கு தருவதாக முடிவெடுத்துள்ளார்.
அதற்கான உரிமங்கள் பெறப்பட்டபின் விரைவில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....