டாப்சி நடிக்கும் “கேம் ஓவரி’ல் நம்பிக்கை வைத்திருக்கும் மாலா பார்வதி.!
மலையாளத்தில் முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் மாலா பார்வதி.அங்கு முன்னணி இளம் கதா நாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் அம்மாவாகவும் மற்ற குணச்சித்திர கதாபதிரங்களிலும் நடித்து சிறந்த நடிகை என்று பெயரெடுத்தவர். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தமிழில் நிமிர் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள 'கேம் ஓவர்' என்ற படத்தில் டாக்டர் ரீனா என்ற முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். இது தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாக அமைந்துள்ளதாக கருதும் மாலா பார்வதி இந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பெற முடியும் என்று நம்புகிறார். அதற்காக அனைவரின் ஆதரவையும் நாடுகிறார் மாலா பார்வதி....