
போய் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்: காயத்ரி ரகுராம் கடும் சாடல்
'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி ரகுராம் வெளியேறியதிலிருந்தே, சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக அவரை கிண்டல் செய்து வந்தார்கள். இதனால் அவ்வப்போது காயத்ரி ரகுராம் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் கிண்டல்களும், மீம்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை கடுமையாக சாடி ட்வீட்களை பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
முகம் காட்டாமல் கிண்டல் செய்பவர்களைப் பார்க்க விரும்புகிறேன். மற்றவர்களிடம் குறையை மட்டுமே பார்க்கும் அந்த திரு, திருமதி கச்சிதமான, மிகத் தூய்மையானவர்களை சந்திக்க வேண்டும். இந்த மீம் உருவாக்கம் 100 கணக்குகளில் நடக்கிறது. அதை ஒருவர்தான் நடத்துகிறார்.
ஒருவரைப் பின் தொடர்ந்து தாக்க எவ்வளவு வெட்டியாக இருக்க வேண்டும். இந்த கிண்டல் செய்பவர்களைப் போல நான் என்னை கச்சிதமானவள் என்று கூறிக்கொள்ள...