
கஜினிகாந்த் டீமிற்கு டாடா காண்பித்த சாயீஷா
கெளதம் கார்த்திக்கின் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்திற்கு பிறகு இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் கைவசம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் ‘கஜினிகாந்த்’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘கஜினிகாந்த்’ படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயீஷா நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சதீஷ், கருணாகரன், சம்பத் நடிக்கின்றனர்.
பால முரளி பாலு இசையமைக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் பார் சாங் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், நடிகை சாயீஷா சம்பந்தப்பட்ட அனைத்...