
அறம் இயக்குனர் கோபி நயினார்வுடன் இணையும் ஆர்யா
நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தை இயக்கியவர் கோபி நயினார். கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தில், கலெக்டராக நடித்தார் நயன்தாரா. ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கப் போராடுவதுதான் இந்தப் படத்தின் கதை.
சமூகக் கருத்துகள் நிறைந்த இந்தப் படத்தை, மக்கள் பயங்கரமாகக் கொண்டாடினர். பெரும்பாலான மக்களுக்கு இந்தப் படம் ரொம்பவே பிடித்துப் போனது. நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில், முக்கிய மைல்கல்லாக இந்தப் படம் அமைந்தது.
எனவே, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது என்று தகவல் பரவியது. இதுகுறித்து ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ‘இப்போதைக்கு ‘அறம் 2’ கிடையாது என்றும், ‘அறம்’ போலவே சமூகக் கருத்துகள் நிறைந்த படத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் தெரிவித்தார்.
‘அறம் 2’ படத்தில் நயன்தாரா நடிக்கப் போகிறார், முதல் பாகத்தைத் தயாரித்த கோட்டபாடி ராஜேஷே இரண்டாம...