அசாதரணமான சிந்தனை தான் ஜீவி திரைப்படம் ரசிகர்களின் பாராட்டில்
எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவது என்பது அரிதான விஷயம். அப்படியே அது நடந்தாலும், திரைப்படத்தில் இயக்குனரின் பெயருடன் சேர்ந்து தான் எழுத்தாளர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இருப்பினும், தமிழ் சினிமா ஜீவி படக்குழுவினரின் உண்மையான தன்மையைக் காண மிகவும் ஆர்வமாக உள்ளது. குறிப்பாக ஜீவி படத்தின் அற்புதமான டிரைலருக்கு கிடைத்த பாராட்டுகளை திரைக்கதை எழுத்தாளர் பாபு தமிழுக்கு வழங்கியிருக்கிறார் இயக்குனர் வி.ஜே.கோபிநாத்.
‘ஜீவி’ படம் தொடங்கியதன் ஆரம்ப புள்ளியை பற்றி இயக்குனர் வி.ஜே. கோபிநாத் கூறும்போது, “2015 ஆம் ஆண்டில், எனது நெருங்கிய நண்பர் பாபு தமிழ் என்னை ஒரு ஸ்கிரிப்டுடன் அணுகி, அதை என்னை இயக்குமாறு கேட்டுக் கொண்டார். இது ஒரு அற்புதமான படம், இதற்கு முன் பார்த்திராத அல்லது கேள்விப்படாத கான்செப்டை கொண்டிருந்தது. உண்மையில், திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் அவ்வாறே உணர்வார்கள் என்ற...