
இளைஞர்களின் திருவிழா கொண்டாட்டம் தான் “ஹர ஹர மகாதேவகி”
கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ ஹர ஹர மகாதேவகி “ Blue Ghost Productions , தங்கம் சினிமாஸ் தங்க ராஜ் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை சந்தோஷ் P ஜெயகுமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்துக்கு இசை பாலமுரளி பாலு , ஒளிப்பதிவு செல்வ குமார்.
விழாவில் கௌதம் கார்த்திக் பேசியது :- எல்லோரும் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை பார்த்து ரசித்திருப்பீர்கள். இந்த கதை பலருக்கு சென்று மீண்டும் என்னை தேடி வந்துள்ளது. இயக்குநர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களை தான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் நான் மிகவும் ரசித்து , சிரித்து கேட்டேன். பாடல்களை கேட்டதும் இந்த கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு இயக்குநர் என்னிடம் ஹரஹர மகாதேவகியின் கதையை கூறினார். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்...