அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் நடிகை ஹன்சிகா பிடிவாதம்
சின்ன குஷ்பு என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படும் ஹன்சிகாக்கு தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த போகன்படம் சரியாக போகவில்லை என்பதுதான் அந்த நடிகையின் மார்க்கெட் இழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இருந்தாலும், நடிகைக்கு வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததாம். அவர்களுடன் நடிக்க நடிகை அதிக சம்பளம் கேட்டும் தயாரிப்பாளர்கள் அதை கொடுக்கவும் முன்வந்தார்களாம். ஆனால், அப்படி கீழிறங்கி சென்றால், முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து அவர்களுடன் நடிக்காமல் ஒதுங்கிவிட்டாராம் நடிகை....