
ஹர ஹர மஹாதேவகி – திரைவிமர்சனம் Rank 3/5
ஹர ஹர மஹாதேவகி படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நகைசுவை படம் லாஜிக் எல்லாம் கிடையாது ஒன்லிகாமெடி மேஜிக் தான் இந்த படம் வயிறு குலுங்க சிரிக்கும் ஒரு முழு நீல காமெடி சித்திரம்
இன்றைய சினிமா ரசிகர்கள் என்றால் அது இளைஞர்கள் தான் அவர்கள் தான் அதிகம் திரையரங்கம் வந்து படம் பார்ப்பவர்கள் அந்த வகையில் ஹர ஹர மஹாதேவகி படம் இளைஞர்களை கவரும் வகையில் மிக நகைசுவையாக எடுத்துள்ளார் இயக்குனர் சன்தோஷ் P ஜெயக்குமார் தயாரிப்பாளர் நலன் கருதி வியாபார யுக்க்தியுடன் படம் எடுத்து இருக்கும் இந்த இயக்குனரை பாராட்டவேண்டும்.
இந்த படம் இளைஞர்களுக்கு மட்டும் என்று சொல்லும் அளவவுக்கு கவர்ச்சியாகவோ இல்லை படு ஆபாசமான வசனங்கள் வைத்து படம் எடுக்கவில்லை நகைசுவை கலந்த ஒரு சில வசனங்கள் அதும் நாம் அன்றாட பேசும் வசனங்கள் தான் அதை இரட்டை அர்த்தத்தில் எடுத்தால் இரட்டை அர்த்தம் இல்லை சாதரணமாக எடுத்தால் வெறும் நகைசுவை தான் அ...