“அசோக் செய்த 70 அடி உயர ஸ்டன்ட் உண்மையிலேயே இன்ஸ்பையரிங்!” – ‘அன்பில் அவன்’ விழாவில் ஹரிஷ் கல்யாண் பாராட்டு
“அசோக் செய்த 70 அடி உயர ஸ்டன்ட் உண்மையிலேயே இன்ஸ்பையரிங்!” – ‘அன்பில் அவன்’ விழாவில் ஹரிஷ் கல்யாண் பாராட்டு
சென்னை:
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஹரிஷ் கல்யாண், ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது, ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவுக்கான புதிய களத்திற்குள் அசோக் செல்வன் நுழைந்திருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், படத்திற்காக அசோக் செல்வன் மேற்கொண்ட 70 அடி உயர ஸ்டன்ட் குறித்து பேசிய அவர், “அசோக் 70 அடி உயரத்திலிருந்து குதித்ததாக என்னிடம் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. அந்தக் காட்சியை ஏன் செய்தாய் என்று கேட்டபோது, கதைக்கு அது தேவைப்பட்டதால் செய்ததாகச் சொன்னார். அந்த ...


